பொன்.சிவகுமாரனின் சிலையை நிறுவ எதிர்கொண்ட நெருக்கடிகளை வரலாறு பதிவு செய்துள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K ஜெகன்!

தியாகி பொன்.சிவகுமாரனுக்கு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும்கூட அதற்காக பல சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருந்ததை வரலாறு நிச்சயம் பதிவு செய்துள்ளது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உரும்பிராயில் நடைபெற்ற பொன் சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் மற்றும் விடுதலை வித்துக்கள் தினமும் ஒருங்கே கடைப்பிடிக்கப்பட்ட இன்றையதினத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
விடுதலை வித்துக்கள் தினத்தை ஒரே கொள்கையின் கீழ் மக்களின் ஆணையுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக எதிர்காலங்களில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளிலிலிருந்து உயிர் நீத்தவர்களையும் நினைவகூருவோம் என்றும் குகேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|