பொன்னாவெளி விவகாரம் – பொய்யுரைக்கும் சிறீதரனை கண்டிக்கின்றது ஈ.பி.டி.பி !

Wednesday, May 15th, 2024

பொன்னாவெளி கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சேர்ந்தவர்களும் முயற்சிக்கின்றனர் என்ற சிறீதரனின் அப்பட்டமான பொய்யை வன்மையாக கட்டிப்பதாக என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசிய கூட்டமைப்பின்) உள்ளூர் அதிகர சபைக்கான தேர்தல் அறிக்கை 2018 ஜனவரி இறுதிப்பகுதியில் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த மாவை சேனாதிராஜாவினால் கூட்டமைப்பின் தலைவரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா சம்பந்தனிடம் வைபவரீதியாக கையளித்து வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது

அதல் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள பொன்னாவெளியில் சிமெந்து உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்காகவும் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்வதென உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அதுமட்டுமல்லாது இவையெல்லாம் அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பக்காகவும் பிரதேச சபையின் வருமானத்துக்காகவும் நாட்டின் கட்டுமாணத்துறையின் மூலப்பொருளான சிமெந்து தேவையை பூர்’த்தி செய்யும் வகையிலும் அன்றைய பிரதமருடன் பேச்சுவார்தை நடத்தி முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இன்று இவ்விடயத்தை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் ஆய்வுளை மேற்கொண்டு அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அதற்கான விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளையும் ஆராய்ந்து தீர்மானிக்கும் முன்னரே அங்கு தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களும் மற்றும் சமத்துவம் பேசுபவர்களும் அயற்கிராமங்களிலிருந்து சிலரை அழைத்துவந்து தவறான கருத்துக்களை பரப்பி இவ் ஆய்வுகளை மேற்கொள்ள விடாது குழப்பத்தை ஏற்படுத்தினர்.

உண்மையில் இப்பகுதியில் யுத்தத்திற்கு முன்னரே நிலம் உவர் நீரானதை அடுத்து மக்கள் இடம்பெயர்ந்து சென்று விட்டார்கள். அப்பகுதியில் மூன்று ஆலயங்கள் மட்டுமே உள்ளன. தவிர மக்கள் குடியிரப்புக்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை.

அவ்வாறிருந்தும் அப்பகுதியில் உள்ள 6 ஏக்கர் நிலத்தை பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் நெருங்கிய உறவினர்கள் ரோக்கியோ நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்காகவென்றே விற்பனை செய்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி மக்களுக்கு நற்பயனை விளைவித்துவிடும், அதனூடாக அவருடைய செயற்பாடுகளுக்கு மக்கள் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதை தெரிந்துகொண்ட இக்கட்சிகள் இவ்வாறாக இதனை தடுக்கும் நோக்குடன் கபடத்தனமாக செயற்பட்டுள்ளனர்.

ஆகவே சிறீதரனுடைய கருத்து என்பது 2018 இல் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழிந்தும் தற்போது அதை டக்ளஸ் தேவானந்தா நடைமுறைப்படுத்தப் போகின்றார் என்பதற்காக அதை எதிர்த்து நாடாளுமன்றில் கருத்து சொல்வதுடன் அரச அதிகாரிகளையும் தவறானவர்கள் என சித்தரிக்க முயல்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: