பொன்னாலை வரதராஜருக்கு இன்று  கொடியேற்ற உற்சவம்!

Thursday, December 21st, 2017

பொன்னாலை ஶ்ரீவரதராஜப் பெருமாள் தேவஸ்தான மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தின மகோற்சவம் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும்.

உற்சவம் காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ஆரம்பமாகும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஶ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜப் பெருமாள் தேரில் ஆரோகணம் செய்வார். மறுநாள் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு மஞ்சத்தில் திருவடிநிலை புறப்படுதலும் இரவு 2 மணிக்கு கொடி இறக்கமும் இடம்பெறும்.

எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிறு முற்பகல் 10 மணிக்கு 1000 சங்காபிஷேகமும் மாலை பூந்தண்டிகை உற்சவமும் நடைபெறும். இதேவேளை கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான திருப்பாவை பூஜை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நிகழப்பெறும்.

மகோற்சவத்தை தேவஸ்தான பிரதம குரு ஶ்ரீ விஷ்ணு ஶ்ரீ க.ச.சோமஸ்கந்தாச்சாரியார் சிறப்பாக நிகழ்த்துவார் என ஆலய பரிபாலனசபை அறிவித்துள்ளது.

Related posts:

கருணாவை விட நாட்டை பிளவுபடுத்த படுமோசமாக முற்பட்டது நல்லாட்சி - பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டு!
2 மாதங்களின் பின் மீண்டும் தொழிலை முன்னெடுக்கும் தமிழகை மீனவர்கள் - இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் ...
ஜனாதிபதி ஆலோசனை - பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் ஜ...