பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!

Saturday, October 21st, 2017

விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்காது இருக்கும் இராணுவவீரர்களுக்கான பொது மன்னிப்புகாலம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் நடைமுறையிலிருக்கும் என இராணுவ நிர்வாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட றெஜிமென்ட் பிரிவுக்கு சமூகமளித்து இராணுவத்திலிருந்து சட்டரீதியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், விடுமுறைபெறாது சேவைக்கு சமூகமளிக்கும் இராணுவ வீரர்களுக்கு அவர் மேலும் அறிவித்துள்ளார்

Related posts:


கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்...
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோனை - சுகாதார அ...