பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் – இராணுவ தளபதி!

Friday, May 28th, 2021

பொதுமக்களிற்கு சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கு ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

எந்த நெருக்கடியின் ஆரம்பத்திலும் ஊடகங்களால் உருவாககூடிய மோசமான பாதிப்புகளை ஒழுங்குபடுத்துவது கட்டுப்படுத்தவது ஒடுக்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனநாயக சமூகத்தில் அதிகாரிகள் அவதானமாகயிருக்கவேண்டும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களை மாத்திரம் கட்டுப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி இது நியாயப்படுத்தக்கூடியதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியின் இடைக்காலத்தில் நெருக்கடி குறித்து போதிய தகவல்கள் விளக்கம் உள்ளதால் ஊடகங்கள் குறித்து தாரளகொள்கையை கடைப்பிடிக்கலாம் என தெரிவித்துள்ள சவேந்திர சில்வா இதன் மூலம் சமூகத்திற்கு சமநிலையான பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட தகவல்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் பொதுமக்களிற்கு குழப்பமான முரண்பாடான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உத்தியோகபூர்வ தகவல்கள் மூலங்கள் மூலம் மாத்திரம் ஊடகவியலாளர்களிற்கு தகவல் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: