பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!

Friday, September 1st, 2023

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சிலர் நீக்குவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தற்போதே அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கட்சியின் தலைவர் மற்றும் நிறைவேற்று குழு, தாம் பொதுச்செயலாளர் பதவிக்கு பொறுத்தம் இல்லை என்ற தீர்மானத்தை எடுத்தால், உடனடியாக அந்த பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில், அந்த கூட்டத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் செய்தியாளர்கள் வினவியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், தயாசிறி ஜயசேகரவின் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: