பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பினர்!

Sunday, October 1st, 2023

ஜேர்மனியில் நடைபெற்ற பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று நாடு திரும்பினர்.

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை அதிகாலை ஜேர்மனுக்கு பயணமானார்.

சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு செப்டெம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் குறித்த மாநாடு நிறைவடைந்ததை அடுத்து தமது ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: