பேருந்து போக்குவரத்து அட்டவணையில் மாற்றம்?

Monday, October 9th, 2017

தேசிய வீதி போக்குவரத்து கொள்கைக்கு அமைய பேருந்து போக்குவரத்து கால அட்டவணை திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் எச்.எம்.சந்திரசிறி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பேருந்து போக்குவரத்து கால அட்டவணை தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பேருந்து போக்குவரத்து கால அட்டவணைகள் மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: