பேருந்து சேவைகளை மட்டுப்படுத்தும் இலங்கை போக்குவரத்து சபை!

Wednesday, March 16th, 2022

கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: