பேருந்து சாரதிகளுக்கு விஷேட பயிற்சி திட்டம்!

Sunday, January 28th, 2018

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பேருந்து சாரதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட விஷே பயிற்சி நடவடிக்கையின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பயிற்சி நடவடிக்கையின் கீழ் விபத்து ஏற்படுத்திய இலங்கைப் போக்குவரத்து சபையின் 160 சாரதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அதிகாரசபையின் தலைவர் சிசிர கோந்தாகொட தெரிவித்துள்ளார்..

அடுத்த கட்ட பயிற்சியின் போது நாடு பூராகவும் உள்ள பஸ் சாரதிகளை இணைத்துக் கொண்டு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க முன்னர் விஷேட கட்டாயப் பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிசிர கோந்தாகொட கூறினார்.

Related posts: