பேருந்துகளில் மீதிப்பணம் தராவிடின் அழையுங்கள்!

Monday, May 28th, 2018

பற்றுச்சீட்டு அல்லது மீதிப்பணம் வழங்காத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  011 555 9595 எனும் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக ஆணைக்குழுவின் மேல் மாகாண சபை தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய விலையை விடவும் அதிக கட்டணம் அறிவிடும் பேருந்து தொடர்பிலும் அறிவிக்குமாறும் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: