பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) செயற்பாடுகளை மத்திய வங்கி ஆறுமாதத்திற்கு இடைநிறுத்தமுடிவு!
Saturday, July 8th, 2017
மத்தியவங்கியின் பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) முதன்மைமுகவர் செயற்பாடுகளை ஜூலைமாதம் மாலை 04.30 மணியிலிருந்து ஆறு மாதத்திற்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
மேலும் இத்தடை மூலதனச் சந்தையில் எதிர்மறையானவிளைவுகளை ஏற்படுத்தாதவண்ணம் தகுந்தசெயற்பாடுகளைமேற்கொள்ளவும் மத்தியவங்கிஉறுதியளித்துள்ளது.
பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) மத்தியவங்கிபிணைமுறிமோசடிவிவகாரத்தில் மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் காலத்தில் இம்மோசடியுடன் நேரடித் தொடர்பு இருந்ததாககுற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன்,இதன்மூலமாக 5.1 மில்லியன் ரூபாவை இலாபமாகசம்பாதித்தும் இருந்தது.
இது அவர்களது முன்னையவருடலாபத்துடன் ஒப்பிடுகையில் 430 வீதஅதிகரிப்பாகும். இவ்வருடபெப்ருவரிமாத்தில் தற்போதையமத்தியவங்கிஆளுனர் ந்திரஜித் குமாரசாமி,பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) மீதானவிசாரணைகளை மேற்கொள்வதற்காகபொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவிற்கு அறிவுறுத்தல்களைவழங்கியிருந்தபோதிலும்,பொலிசார் இவ்விசாரணையில் மெத்தனப் போக்கைகடைப்பிடித்ததாகவேதகவல் அறிந்தவட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இவ்விடயத்தில் குற்றஞ் சாட்டப்பட்டமத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனும்,அவரதுமருமகனுமாகிய அர்ஜூன அலோசியசும் இலங்கையின் தற்போதையபிரதமரானரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கியநண்பர்களாக இருப்பதுதான் இதன் காரணம் என்றுகூறப்படுகின்றது.
இதனிடையே“கோப்”அறிக்கையும் பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) மீதானவிசாரணையை முன்னெடுக்குமாறு சட்டஅமுலாக்கஅதிகாரிகளைபணித்திருந்தநிலைமையில் அறிக்கையும் பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) எவ்வாறுமுதன்மைமுகவர் ஸ்தானத்தைஎவ்வாறுபெற்றுக் கொண்டதென்பது இன்னும் பலஊகங்களுக்கு இடமளிப்பதாகவே இருக்கிறது.
Related posts:
|
|