பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, April 15th, 2019

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்


சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்கத்திற்கான சட்ட ரீதியான தடைகள் நீக்கம்!
உலக நாணய நிதியத்துடன் இணக்கம் கொள்ளும்  இலங்கை!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழா ஆரம்பம்!
பரீட்சைத் திணைக்களத்தின் பிரச்சினைக்கு காரணம் என்ன?
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வாக்குச் செலுத்துவதில் ஆர்வங்காட்டும் வாக்காளர்கள்!