பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுப்பு – யாழ்ப்பாணத்தில் 6 இடங்களில் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை!

Thursday, August 11th, 2022

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் பெண்களை அதிலிருந்து மீட்டு சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சமூக மட்ட அமைப்புகள் சுயதொழில் முயற்சியாளர்கள் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை ஒன்றிணைத்து கருத்திட்டங்களை முன்மொழிவதற்கான கருத்தரங்கொன்று யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விடுதியில் நேற்’றையதினம் நடைபெற்றது.

ஜெசாக் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பிரதேச மட்ட அமைப்பகளூடாக அவர்களுடைய பகுதிகளில் அப்பிரதேச பெண்களின் ஆளுமைகள் மற்றும் வலுவைகொண்டு மேற்கொள்ளக்கூடிய கருத்திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு அவற்றை முன்னெடுக்கக் கூடிய ஏதுநிலைகளின் சாதக பாதக நிலைமைகள் குறித்த விவாதிக்கப்படு நடைமுறைப்படுத்துவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு பிரதேசங்களை உள்ளடக்கிய ரீதியில் பெண்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த பயிற்சி பட்டறையினூடாக தற்போது திட்டங்களை பெண்களிடமிருந்தே பெறப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை குறித்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக சுமார் 6 பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள குறித்த திட்டமானது மனித வளத்தையும் பிரதேசத்திலுள்ள இயற்கையான வளங்களையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு பெண்களிடையே குறிப்பாக சமூகமட்ட பெண்கள் அமைப்பகளிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts: