நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!

Saturday, December 29th, 2018

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண் கடன் அறிவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்தோடு வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளினால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற்காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.

Related posts: