சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக தொலைக்காட்சியான ப்ளூம்பெர்க் உடனான உரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –

எங்களின் அனைத்து பத்திர ஏலங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. வட்டி விகிதங்கள் நடுத்தர மட்டத்தில் உள்ளன.

இந்த ஆண்டு நமது பங்குச் சந்தையின் செயல்திறனைப் பார்த்தால், சமீப காலமாக மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் மீண்டும் நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர். வங்கித் துறையின் பொதுவான நிபந்தனைகளும் நன்றாகவே உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அத்துடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற நாம் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. “நாங்கள் நமது பொருளாதாரத்தில் சில மாற்றங்களைச் செய்து வருகிறோம்.

குறிப்பாக தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை குறித்து பேசப்படுகிறது. ஐஎம்எப் வந்தாலும் இந்த மாதிரியான அறிவுரைகள்தான் வழங்கும். இதைத்தான் அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது என்றம் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: