பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டு – கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது !

Wednesday, September 4th, 2024

பெண் ஒருவரிடம் கையூட்டல் கோரிய குற்றச்சாட்டில் கரைச்சி பிரதேச சபையின் வருவாய் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பிரதேச உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அவர்கள் கையூட்டல் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணிடம் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கையூட்டலாக கோரிய அதிகாரிகள் பின்னர் அதனை ஒரு இலட்சம் ரூபாவாகவும் பின்னர் 60 ஆயிரம் ரூபாவாகவும் குறைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீட்டுக்கு முன்பாக வைத்து நேற்று பணத்தை பெற்றுக்கொள்ள முற்பட்டபோது, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

000

Related posts:


இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
எழுத்து மூலம் அறிவிக்கப்படுமாயின் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பய...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கை...