பூநகரி முட்கொம்பன் பகுதி கல்வி வளர்ச்சிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் – கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் உறுதியளிப்பு!

தமது பகுதி வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மாலைநேர வகுப்புகளை நடத்துவதற்கான நிரந்தர கட்டடம் அமைப்பதற்கான நிதி உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் பூநகரி முட்கொம்பன் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நேற்றையதினம் முட்கொம்பன் கிராம மக்களது பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் குறைகேள் நிகழ்வு முட்கொம்பன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்களிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலின் போது குறித்த பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரதான தேவைப்பாடுகள் பற்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமது கருத்துரைகளை தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக தமது பகுதிக்கான வீதிகளை புனரமைத்தல், வாழ்வாதாரத் தேவைகள், முட்கொம்பன் அ.த.க. பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் வெற்றிடம், கணணிக்கூடம், மாலைநேர வகுப்பபிற்கான கட்டிடம் மற்றும் தளபாடங்கள், பனை அபிவிருத்தி சபையினால் பன்ன வேலைப்பயிற்சி பெற்ற 60 இற்கும் மேற்பட்ட பெண்களுக்கு தேவையான பனம் குருத்தோலைகளை பெற்றுக்கொள்ள நிதியுதவி போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் மக்களத நிலைப்பாடுகளை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்று தருவதாக உறுதி அளித்ததுடன் தளபாடங்களுக்கான நிதியாக ரூபா 50.000 , மாலை நேர கற்கைக்கான கொட்டகை அமைப்பதற்கு ரூபா 200.000 செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவும் தனது மாகாணசபை உறுப்பினருக்கான நன்கொடை நிதியின் ஊடாகவும் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்ததுடன் மக்களின் ஏனைய கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முட்கொம்பன் கமக்கார அமைப்பின் தலைவர் குலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி.சீவரத்தினம் கலந்துகொண்டு கட்சியின் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
முட்கொம்பன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் இரத்தினம் அமீன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொதுமக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|