புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!

Friday, November 23rd, 2018

இலங்கையிலிருந்து பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இந்தியாவிற்கு அனுப்பியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ம் திகதி மும்பையில் இந்திய வருமான புலனாய்வுப் பிரிவின் முன்னர் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோடிக் கணக்கான இந்திய ரூபா பெறுமதியான குறித்த பாக்கு வகைகள் நன்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலியான நிறுவனமொன்றை நிறுவி இவ்வாறு பாக்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் யாவும் நிச்சயம் வரலாற்றில் பதிவ...
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் ...
இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசே...