உயர்தர பரீட்சையின் போது இலத்திரனியல் சாதனங்களை வைத்திருக்க தடை – பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 20th, 2023

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் உயர்தர பரீட்சையின் போது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறினால் ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை சட்டத்தின்படி, கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புளூடூத் சாதனங்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வர பரீட்சார்த்திகளுக்கு அனுமதி இல்லை.

கொண்டு வர அல்லது பரீட்சார்த்திகளின் வசம் வைத்திருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறிய சாதனங்களை பரீட்சார்த்திகள் சென்றடையக்கூடிய அல்லது அணுகக்கூடிய இடங்களில் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: