புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Thursday, March 25th, 2021

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர், நவீன் டி சொய்சா, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்புடையவர்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத்துறை கோரியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அவருடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், நீதிமன்றங்களில் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்குப் பின்னரான ஒரு வாரகாலப் பகுதியில்  தொடர்புடையவர்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுள்ளது.

Related posts: