புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, April 1st, 2024

எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளியில் செல்லும் மக்கள் கொள்ளையர்களிடம் இருந்து தங்களது நகைகள், பணத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொருட்கள் கொள்வனவிற்காக செல்லும் போது தங்களது பணப்பை மற்றும் நகைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பழங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ரஞ்சன் ராமநாயக்கவின் பிணை விவகாரம்: நுகேகொட நீதிமன்றத்தில் சரணடைந்தார் சுமந்திரன் – சுமந்திரன் மக்கள...
ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை...
சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிப்ப - 9 வீடுகள் பகுதியளவில...