புத்தாண்டிற்குப் பின்னர் பணிப்புறக்கணிப்பிற்குத் தயாராகும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்!

எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் வரையறைக்கு உட்பட்டவகையில் வேலை செய்யும் போராட்டத்தில் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின்தலைவர் சௌமிய குமாரவடுகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய யோசனைகளை, மின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைத்துள்ள போதும் இன்னும் அனுமதி வழங்கப்படாமைக்கு எதிராக குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான கடிதம் நாளையதினம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தங்களது சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டால், நாளை முதல் தங்களது போராட்டத்தை இடைநிறுத்தி, பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கடந்த 41 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|