புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, December 7th, 20222050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாடிதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச் செலாவணியே என்றும் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|