புதிய பல சட்டங்கள் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் – பிரதமர்!
Sunday, December 11th, 2016நாட்டிற்கு முக்கியமான பல சட்டங்கள் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை நேற்று நிறைவு செய்து பிரதமர் சபையில் உரையாற்றினார். இதன்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுனையில் :
இந்த வருடத்தில் பாராளுமன்றத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ள அதேவேளை, பல சட்டங்களை சமர்ப்பிக்கவும் முடிந்தது. இதற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும்; நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
இதே வேளை 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சார்பாக 165 பேர் வாக்களித்துள்ளனர். எதிராக 55 பேர் மாத்திரமே வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் உறுப்பினர்கள் , வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
வரவு செலவுத்திட்டத்தின்மீதான இந்த மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஐபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதiலை முன்னணி உறுப்பினர்களும் மாத்திரமே எதிராக வாக்களித்தனர்.
Related posts:
|
|