புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, July 7th, 2023

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான வரைவு சட்டமூலம் நேற்று பிற்பகல் தொழிலாளர் ஆலோசனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: