புதிய தேசிய வருமான வரி சட்டமூலம் இன்று!

Thursday, September 7th, 2017

நாட்டின் புதிய தேசிய வருமான வரி சட்டமூலம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சட்டமூலத்திற்கு அமைய இலங்கையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நாடுகளுக்கு இலாபத்தை அனுப்பும் போது அறவிடப்படும் மூலதன வரி, வைப்பு வரி, சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி என்பன ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது

புதிய சட்டமூலத்திற்கு அமைய காப்ரேட் வரிகள் உட்பட ஏனைய வருமான வரிகள் செலுத்தப்படுவது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.தற்போது அறவிடப்படும், 10, 12, 15,20 மற்றும் 40 வீத வரிகள், எதிர்காலத்தில் 14, 28,40 என மூன்று வீதங்களில் மாத்திரம் அறவிடப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.வருடாந்தம் 5 இலட்சம் ரூபா என இருந்த தனி நபர் வருமான வரி 6 இலட்ச ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், தனி வர்த்தகர் அல்லது தொழில் புரியும் நபர் ஒருவர் வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவை வருமானமாக பெற்றால், அவருக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: