புதிய தண்டப்பணம் அமுல்!

Monday, July 16th, 2018

போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்றுமுதல் (15) அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது.

அதன்படி குறைந்த பட்ச தண்டப் பணமாக 500 விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தண்டப் பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த தண்டப் பத்திரத்தால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: