புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த வாரம்!

Wednesday, April 12th, 2017

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் இம்முறை 95 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்கான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவற்றுள் 4 கட்சிகள் தலா 2 விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளன என்று செய்திககள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்ததாவது,

ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் எதிர்வரும் 19ஆம் திகதி அரம்பமாகும் நேர்முகத் தேர்வு 20,21,22,26,27 ஆம் திகதிகள் வரை தொடரும் ஒவ்வொரு விண்ணப்பமும் மிகவும் உன்னிப்பாகப் பரிசீிக்கப்படும். நேர்முகத் தேர்வுகள் முடிவடைந்த பின்னர் தேர்தல்கள் ஆணையகத்தின் நிறைவேற்றுச் சபை தகுதிபெற்ற கட்சிகளைச் தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

Related posts: