புதிய ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, December 10th, 2021

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால், இலங்கை வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, 2022ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் 2022 இல் பொதுத்துறை ஊழியர்களின் புதிய ஆட்சேர்ப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: