புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து அவதானம்!

Tuesday, April 19th, 2022

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கும் வகையிலான புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த யோசனையை முன்வைத்த போதும், அதற்கு காலம் எடுக்கும் என்ற ரீதியான கருத்துக்கள் அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதுவரையில் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள ஸ்தாபிக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: