புதிய அரசியல் அமைப்பு செயற்குழு பிரதமர் தலைமையில் கூடுகிறது!

Wednesday, January 4th, 2017

நாட்டின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் திட்டங்களை வகுத்து செயற்படுத்தும் குழு பிரதமர் தலைமையில் நாளை(05) கூடவுள்ளது.

இதன்போது, அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் செயற்குழு கவனம் செலுத்தவுள்ளதோடு; புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் பரிந்துரைகள் இதுவரையில் கிடைக்கவில்லை என செயற்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தன்மை, தேர்தல் முறைமை நிறைவேற்று அதிகாரத்தின் தன்மை, அதிகார பகிர்வு குறித்த அடிப்படைகள், மதம் மற்றும் காணிகள் போன்ற ஆறு விடயங்கள் நாளைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அடிப்படை உரிமைகள், நீதிமன்றம், நிதி, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, அரச சேவை துணைகுழுக்களின் அறிக்கைகள் அரசியல் அமைப்புப் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும், அனைத்து அறிக்கைகள் தொடர்பிலும் இம்மாதம் விவாதம் நடத்தப்பட்டு மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி உத்தேச அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக செயற்குழுவின் உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0ranil-2

Related posts:

நியமனத்துக்காகக் காத்திருக்கும் 820 சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்த்த பின்னரே மேலதிக தெரிவுகள் இடம்பெற...
மன்னார் பிரதேச செயலகத்தில் பெருந்தொகை பொருட்கள் திருட்டு. – தீவிர நடவடிக்கையில் பொலிசார்!
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பு...

மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர்...
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...
முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநா...