புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது!

Friday, January 6th, 2017

 

ஜனவரி 9, 10,11 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இலங்கையின் உத்தேச புதிய அரசியல் அமைப்பு தயாரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று முற்பகல் இடம்பெற்ற அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு கூட்டத்தின்போது இந்தத் முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் அமைப்பு சபையின் செயலாளரும், நாடாளுமன்ற பிரதி செயலாளருமான நீல் இத்தாவெல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உளளன.

முன்னதாக அரசியல் அமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவால் தயாரிக்கப்படும் இடைக்கால அறிக்கையை ஆராய்ந்து இணக்கப்பாடு எட்டப்பட்டவேண்டிய அவசியம்.

இதன்பின்னரே அரசியலமைப்பை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளதாக இத்தாவெல குறிப்பிட்டுள்ளார்.

150129123753_lanka_parliament__512x288_epa_nocredit

Related posts: