புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்சர்கள் நியமனம்!

Wednesday, August 19th, 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்களாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி, ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முதன்முறையாக அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரி, நாமல் ராஜபக்ஸ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதற்கும், 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர்களாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரனவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: