புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு – புகையிரத பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021

இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்ததாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏற்கனவே 50 புகையிரத பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெட்டிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, புகையிரத போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: