புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு தடை!
Saturday, November 11th, 2017புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் அபேயவிக்கிரம அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
புகையிரதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதன் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகின்றது.
பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மற்றும் இடையூறுகள் தொடர்பில் பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புகையிரதசேவை பொதுமக்களின் போக்குவரத்து சேவை வசதிக்காகவே நடத்தப்படுகின்றது . எனவே பயணிகளுக்கு இவ்வாறான சிரமங்களை எதிர்நோக்க இடமளிக்க முடியாது. அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜெனரல் கபில வைத்தியரத்ன!
கொரோனாவை போன்று டெங்கு நோயையும் இல்லாதொழிக்க விஷேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் உ...
உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை - நிதி அமைச்சர் பசி...
|
|