பிரிவினைவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த ராஜபக்ஷ!

Friday, November 1st, 2019

பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் கொழும்பு மாநகர சபை மாநாடு (31) குணசிங்கபுர பாயிப் பாக் மைதானத்தில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், டுமக்கள் இன்று வறுமை மற்றும் ஏழ்மையில் சிக்கி தவிக்கின்றனர். சிறந்த வேலைத் திட்டங்கள், சிறந்த நோக்கம், சிறந்த இலக்கு, வேலை செய்ய முடியும் என நிரூபித்த ஒருவராலேயே அது சாத்தியமாகும்.

அனைவரின் சம்மத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷவை நாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம். தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க நாம் யோசித்தோம். அதற்காகவே நாம் அவரை வேட்பாளராக நியமித்தோம்.

பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இது தொடர்பில் நன்கு அறிந்த ஒருவராலேயே இதனை செயற்படுத்த முடியும். கோட்டாபய ராஜபக்ஷ தவிர்ந்த வேறு எவருக்கும் அதனை செய்ய முடியாதுடு என்றார்.

Related posts:


மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீ...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்த...
ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த ...