பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஹேமதாஸ் கோரிக்கை!
Friday, December 14th, 2018வேலணை பிரதேச சபையின் உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லைகள் இடப்பட வேண்டியதுடன் அக்காணிகளின் உறுதிப்பத்திரங்கள் சரியான முறையில் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஹேமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வேலணை பிரதேச சபையின் உரித்துடைய காணிகள் பல இனங்காணப்படாத நிலையிலுள்ளன. அதுமட்டுமல்லாது பல காணிகளுக்க உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலை காணப்படகின்றது. அந்தவகையில் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Related posts:
|
|