பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம் – குடிவரவு – குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!

Monday, November 2nd, 2020

நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், இன்று 2 ஆம் திகதிமுதல் மறு அறிவித்தல்வரை, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம், பெற்றுக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய சேவைகளுக்காக, அலுவலக வேலை நாள்களில், காலை 8 மணிமுதல் பிற்பகல் 4.30 மணி வரை, கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060 , 070-7101070 என்ற இலக்கங்களூடாகவும் குடியுரிமைப் பிரிவு – 070-7101030 என்ற இலக்கத்தினூடாகவும்  வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு –  011-5329233, 011-5329235 இலக்கங்களூடாகவும் விசா பிரிவு 070-7101050 இலக்கமூடாகவும் அல்லது (dcvisa@immigration.gov.lk/ acvisa1@immigration.gov.lk/ acvisa2@immigration.gov.lk/ acvisa@immigration.gov.lk) இணைய முகவரியூடாகவும் துறைமுகங்கள் பிரிவு – 077-7782505 இலக்கமூடாகவும் பொதுவான ஆலோசனைகளும் மேலதிக தகவல்களும் www.immigration.gov.lk இணைய முகவரியூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி, வவுனியா, மாத்தறை, குருணாகல் பிராந்தி அலுவலகங்கள், அத்தியவசியத் தேவைகளுக்காகவும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது நாட்டில் அமலில் உள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்பட்டு, 070-7101060, 070-7101070 ஆகிய அலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு, திகதியொன்றை ஒதுக்கிய பின்னர், பிராந்திய அலுவலகங்களுக்கு வருகைத் தருமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை , தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள், பிராந்திய அலுவலகங்களுக்கு வருகைத் தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: