பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷேட சந்திப்பு!

Sunday, February 18th, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அலரி மாளிகையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் தேர்தலின் பின்னரான அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினால், பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் காட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts: