பிரதமர் இன்று இந்தோனேசியா பயணம்!

Monday, August 1st, 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசீம், சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.எதிர்வரும் 3ஆம் திகதி இரவு பிரதமர் மீண்டுவும் நாடு திரும்பவுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

Related posts: