பிரதமரின் விருப்புக்காகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது: அமைச்சர் ராஜித!

Thursday, August 24th, 2017

தேசிய அரசாங்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமையவே அமைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.100 நாள் வேலைத்திட்டம் மற்றும் தேசிய அரசாங்கம் ஆகிய வேலைத்திட்டங்கள் அரசியல் லாபம் கருதிய வேலைத்திட்டங்கள் அல்ல.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய வேலைத்திட்டம். தெற்காசியாவில் முதலாவது பரீட்சார்த்த முயற்சியாக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

கட்சி ஒன்றை உருவாக்கப்படுவதை விட நாட்டை உருவாக்கி எடுப்பது சிரமமானது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்..

Related posts: