பிணை முறி விநியோகம் தொடர்பில் புதிய தகவல்!
Tuesday, June 20th, 2017
பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்
இந்த நஷ்டத்திற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம்,சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்திற்கு முன்னர் தேசிய கடன் முகாமைத்துவ குழு ஒன்று கூடாததன் காரணமாக, இந்த முறிவிநியோக ஏலத்தில் திரட்டப்படும் தொகையை அரச கடன் திணைக்கள அதிகாரிகளே தீர்மானித்துள்ளனர்
எனினும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக இந்த விடயத்தை தாம் தமது அறிக்கையில் உள்ளடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
முறிவிநியோகம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்
Related posts:
|
|