பால் மா விலை அதிகரிப்பு:  கையிருப்புக்கு செல்லுபடியாகாது!

Monday, May 7th, 2018

வர்த்தக நிறுவனங்களிடம் தற்போதைக்கு கையிருப்பில் இருக்கும் பால்மா பைக்கற்றுகளுக்கு விலை அதிகரிப்பு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு கட்டுப்படுத்தல் தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் சிபார்சின் பிரகாரம் இம்மாதம் 01ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டது.

எனினும் மே மாதம் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் பொதி செய்யப்படும் பால் மா பைக்கற்றுகளுக்கு மட்டுமே குறித்த விலை அதிகரிப்பு செல்லுபடியாகும் என்று நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதற்கு முந்திய திகதியில் பொதிசெய்யப்பட்டு கையிருப்பில் உள்ள பால் மா பைக்கற்றுகள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts:

டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை த...
தனியார் கல்விநிலையம் தொடர்பான தீர்மானத்தில் மாற்றம் இல்லை - எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பல...