பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்!

Wednesday, February 6th, 2019

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் பன்றி எண்ணெய், பார்ம் ஒயில், லெக்டோஸ் கலந்துள்ளதாக முறைப்பாடுகள் அதிகளவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது தொடர்பிலான வெளிநாட்டு ஆய்வகப் பரிசோதனையினை மேற்கொள்ள உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை, கூட்டுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

லெக்டோஸ் மற்றும் பன்றி எண்ணெய், லெக்டோஸ் மற்றும் பார்ம் ஒயில் கலப்படம் செய்து இலங்கைக்கு அனுப்பப்படும் தூள் வகைகள், இலங்கை மக்கள் பால்மாக்கள் எனும் பெயரில் அருந்துவதாகவும் குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை சந்தையில் உள்ள பால்மாக்கள் தொடர்பில் சோதனைகள் முன்னெடுக்க நுகர்வோர் அதிகார சபையினால், இலங்கை ஆராய்ச்சி நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்தி ஒப்படைத்த போதிலும், இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த நிறுவனமானது சோதனைகளை மேற்கொள்வதனை நிராகரித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் பால்மா நிறுவனங்கள் குறித்த நிறுவனத்திற்கு இலஞ்சம் வழங்கியுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக வெளிநாட்டு ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

சில பால்மா நிறுவனங்களது பெயரில் இலங்கைக்கு இறக்குமதியாகும் பால்மாக்களில் பன்றி எண்ணெய், கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. லெக்டோஸ் மற்றும் பார்ம் ஒயில் கலப்படம் செய்து தயாரிக்கப்படும் தூள் வகையிலான பால்மாக்கள் இலங்கைக்கு இறக்குமதியாவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நியூசிலாந்தில் இருந்து கொண்டுவரப்படும் பால்மாக்களில் மாத்திரமே குறித்த கலப்படம் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தில் உள்ள அனைத்து மாடுகளில் இருந்தும் பால் கரக்கப்பட்டாலும் இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு கொண்டுவரப்படும் பால்மாவின் உற்பத்திக்கு ஈடு ஆகாது என கணிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

லெக்டோஸ் மற்றும் பன்றி எண்ணெய், லெக்டோஸ் மற்றும் பார்ம் ஒயில் கலப்படம் செய்து அனுப்பப்படும் தூள் வகைகள் இலங்கையில் நாம் பால்மாக்கள் என அருந்துகிறோம் எனவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும், இது தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்கட்டியிருந்தார்.

Related posts: