பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தை மூனிடம் கையளித்தார் ஜனாதிபதி!

Thursday, September 22nd, 2016

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில்,  இலங்கை இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், ஜனரினதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

நியூயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்சபை அமர்வின் போதே, இந்த உறுதிப்பத்திரம் ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டது. காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு 195 நாடுகள் மற்றும் அமைப்புகள், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் இணக்கம் கண்டிருந்தன.

இந்த உடன்பாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கடந்த மே மாதம் கையெழுத்திட்டிருந்தார்.

ban-ki-moon-ms

Related posts: