பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடல்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு பயணமானார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் உடன் இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
000
Related posts:
துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு!
பாடசாலைகளில் தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு!
அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு கிடையாது - வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
|
|