பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

Wednesday, August 15th, 2018

பாரத தேசத்தின் 72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார்.

நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி முதலில் ராஜ்காட்டில் உள்ள தியாகிகள் நினைவிடம், காந்தி நினைவிடம் உள்ளிட்ட நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, அவர் செங்கோட்டைக்கு சென்றார். அங்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாதுகாப்பு இணை அமைச்சர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, முப்படை தளபதிகளின் மரியாதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

இதையடுத்து, அவர் சுதந்திர தின உரையை ஆற்றி வருகிறார்.

இந்த சுதந்திர தின விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெ கௌடா, பாஜக தலைவர்கள் அமித் ஷா, அத்வானி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related posts: