பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை பொதுநிர்வாக, அரச முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளான அரச ஊழியர்கள் தங்களது கடமைகளுக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|