பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!

Wednesday, December 13th, 2017

ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளார். ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த மயில்வாகனம் தர்சிகா (வயது-18) என்ற மாணவியே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவியின் வீட்டில் நுளம்புப்பெருக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த மாணவியின் தாயார் குறித்த மாணவியிடம் நுளம்பு வலையை விரித்து விட்டுத்தூங்கும்படி கோரியுள்ளார். மாணவி அதற்கு மறுப்புத்தெரிவிக்கவே தாயார் தடியால் மகளுக்கு அடித்துள்ளார். மனவிரக்தியால் குறித்த மாணவி அறையினுள் சென்றுள்ளார்.

பின்னர் சற்று நேரம் கழித்து குறித்த மாணவியின் சகோதரி அறைக்குள் போய் பார்த்தபோது மாணவி தாவணியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இவருடைய மரணவிசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: